Sunday, March 20, 2011

தேங்காய் பால் கட்டு சாதம்


*** தேவையான பொருட்கள் ***

புழுங்கல் அரிசி         _       ஒரு டம்ளர்
தேங்காய் பால்           _       அரை டம்ளர்
புளி                                 _       சிறிய எலுமிச்சை அளவு

*** தாளிக்க ***
கடுகு                             _         ஒரு ஸ்பூன்
உளுந்து                        _         ஒரு ஸ்பூன்
காய்ந்த மிளகாய்       _         இரண்டு
கறிவேப்பிலை          _          ஒரு கொத்து
மஞ்சள்த்தூள்             _          அரை ஸ்பூன்
பெருங்காயத்தூள்     _          கால் ஸ்பூன்
நல்லெண்ணெய்        _         5 தேக்கரண்டி

*** செய்முறை ***


புளியை கழுவி விட்டு ஊறவைக்கவும்.
அரிசியை நன்கு கழுவி விட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரில் சாதமாக சமைத்து வைத்துக் கொள்ளவும்.புழுங்கல் அரிசியை ஒரு அரை மணிநேரம் ஊறவைத்து எப்போதும் சமைத்தால் சாதம் வெண்மையாகவும்,நன்றாகவும் இருக்கும்.

புளியில் தேங்காய் பாலை சிறிது சிறிதாக ஊற்றியே இரண்டு மூன்று முறை கரைத்து வடிக்கட்டி வைத்துக் கொள்ளவும்.(வேறு தண்ணீர் சேர்க்க கூடாது)

ஒரு சிறிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும்,கடுகு,உளுந்தம்பருப்பு போட்டு பொறிந்ததும்,கய்ந்தமிளகாயை இரண்டு மூன்றாக கிள்ளி சேர்த்தும்,பின் பெருங்காயத்தூள்,மஞ்சள்த்தூள் சேர்த்து பின் கறிவேப்பிலையும் போட்டு அதில் கரைத்து வைத்திருக்கும் கரைசலை ஊற்றி அதற்க்கு தேவையான அளவு உப்பும் சேர்க்கவும்.



பிறகு அதை நன்கு கொதிக்க விடவும்.ஒரளவு கொதித்து  சாதத்தில் பிரட்டும் அளவிற்க்கு ஆனதும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
பிறகு அதை சாதத்தில் ஊற்றி நன்கு எல்லா பக்கமும் படுமாறு கிளறி வைக்கவும்.

சுவையானதொரு தேங்காயப்பால் கட்டு சாதம் தயார்.
நன்கு கொதிக்க விட்டு சாதத்தை கிளறுவதால் ஒரு நாள் முழுக்க கெடாமல் அப்படியே இருக்கும்.எந்த நீண்ட வெளியூர் பயணத்திற்க்கும் எடுத்து செல்லலாம்.
இதற்க்கு தொட்டு கொள்ள உருளை வறுவல்,வாழைக்காய் வறுவல்,முட்டை க்ரேவி இவையல்லாம் நல்ல காம்பினேஷனாக இருக்கும்.






4 comments:

அஸ்மா said...

அஸ்ஸலாமு அலைக்கும் அப்சரா! இதே முறையில்தான் நாங்களும் செய்வோம். இன்னொரு முறை, 3 நாட்களாக இருந்தாலும் ஃபிரிஜ் இல்லாமலே வீணாகாதபடி பதத்தில் செய்வோம் (அது வெளியூர் பயணங்களுக்கு). உங்க கட்டு சோறும் அருமையா இருக்கு அப்சரா.

apsara-illam said...

வ அலைக்கும் சலாம் அஸ்மா...,நீங்க நம்ம பக்கம் ஆச்சே.... அப்ப நிச்சயம் இதெல்லாம் நமது பாரம்பர்ய முறையாக்கும்.
தங்கள் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி அஸ்மா...

அன்புடன்,
அப்சரா.

Asiya Omar said...

புதுசாக இருக்கு அப்சரா.அருமை.

apsara-illam said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஆசியா அக்கா.

அன்புடன்,
அப்சரா.

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out